மட்டுவில் கோர விபத்து! ஒருவர் பலி, பஸ் மீது தாக்குதல்

மட்டக்களப்பு – மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிரான் குளத்தில் இன்று (21) மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.
தனியார் பேருந்து ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவரே சம்பவ இடத்தில் பலியாகினார்.
அக்கரைப்பற்றில் இருந்து வாழைச்சேனை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து அதே திசையில் சென்று கொண்டிருந்தவர் மீது மோதி இழுத்துச் சென்றுள்ளது.
இதன்போது குறித்த மோட்டார் சைக்கிள் எரிந்துள்ளது. இதன்போதே இளைஞன் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தை அடுத்து பேருந்து மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் சில இளைஞர்கள் காத்தான்குடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


No comments