ஒன்றிணைந்த பட்டதாரிகள் போராட்டத் தயாராகின்றனர்

வேலையில்லா பட்டதாரிகளுக்கு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய உடனடியாக நியமனங்களை வழங்குமாறு கோரி போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
அத்துடன் ஜனாதிபதியின் பெயரில் விநியோகிக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்திற்கு எதிராகவும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சங்கம் அறிவித்துள்ளது.
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியில் அனைத்து வேலையற்ற பட்டதாரிகளின் கலந்துரையாடலின் பின்னர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த  ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தன்னே குணானந்த தேரர் மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

No comments