கமலுக்கு வவுனியாவில் கண்டனம்?


இலங்கையின் புதிய பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த நிலையில் அதனை கண்டித்து வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆர்பாட்டம் ஒன்று இன்று மாலை முன்னெடுக்கபட்டிருந்தது.

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் போர் குற்றவாளி கமல் குணரத்ன பாதுகாப்பு செயலாளராக மீண்டும் அதிகாரத்துக்கு வந்துள்ளார் இது அவர்களின் தமிழ் இனப்படுகொலையை தொடர்ந்து ஊக்குவிக்கும் என்ற வாசகம் பொறிக்கபட்ட பதாகையை ஏந்தியிருந்ததுடன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க நாட்டினது கொடிகளையும் கையில் ஏந்தியிருந்தனர்.

வவுனியாவின் பிரபல இராணுவ சித்திரவதை முகாமாக இருந்த ஜோசப் முகாமின் கட்டளை அதிகாரியாகவும் கமல் குணரட்ண இருந்திருந்தார்.
தற்போதைய ஜனாதிபதி கோத்தபாயவின் நெருங்கிய சகாவான கமல் குணரத்தின பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்ட பின்னர் முதல் தடவையாக யாழ்.வருகை தந்திருந்த நிலையில் எதிர்ப்பு போராட்;டம் நடத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு முல்லைதீவு,வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments