அதற்கு இவர்கள் லாயக்கில்லை:சுரேஸ்

 கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற பங்களாளிகளான ரெலோ, புளொட் அமைப்பினர் மாற்று அணியில் இணைந்து கொள்வதற்கு தயாரில்லை. அத்தகைய சிந்தனையும் இப்போதைக்கு அவர்களிடம் இல்லை. ஆனால் மாற்று அணியை தங்களுக்கு ஒரு துருப்புச்சீட்டாக பயனப்படுத்தி தமிழரசுக் கட்சியிடம் தங்களுக்கான ஒரிரு ஆசனங்களை அதிகமாகப் பெற்றுக் கொள்வது தான் அவர்களது இன்றைய நோக்கமாக இருக்கலாம் என தெரிவித்துள்ள ஈபீஆர்எல்எப் அமைப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் கடந்த முறையும் காலையில் இணைந்து செயயற்பட முடியாது என்று கூறியவர்கள் மாலையில் இணைந்து கொண்டனர் என்றும் சாடியுள்ளார்.


உண்மையாகவே இப்போது ஏற்பட்டிருக்கின்றதாக கூறப்படும் குழப்பங்கள் என்பது ஒரு புதிய குழப்பங்கள் அல்ல. இதற்கு முன்னரும் இவ்வாறான குழப்பங்கள் வந்திருக்கிறது. முக்கியமாக செல்வம் அடைக்கலநாதன் கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலின் போது தமிழரசுக் கட்சியுடன் முரண்பட்டு தாங்கள் இன்னுமொரு கூட்டுக்குள் சேரப் போகிறோம் என்று சொல்லி எங்களுடனும் சில பேச்சுவார்த்தைகளை நடாத்தியிருந்தார்.

தமிழரசுக் கட்சியுடன் இணைந்து போக முடியாது என பல வீரதீர கதைகளைக் கூறி அதாவது காலையில் அப்படி கூறி மாலையில் மீண்டும் போய் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து கொண்டவர்கள்; என்பது தான் வரலாறு. இப்பொழுதும் கூட சில சமயம் தங்களுக்கான பாராளுமன்ற ஆசனங்களைக் கூட்டிக் கேட்பதற்காக தமிழரசுக் கட்சி மேல் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி நீங்கள் சரிப்பட்டு வராவிட்டால் நாங்கள் வேறு அணிக்குள் போகப் போகின்றோம் என்ற தோற்றப்பட்டை ஏற்படுத்தி ஒன்று இரண்டு ஆசனங்களைக் கூட்டிக் கேட்பதற்கான முயற்சியாகத் தான் இதனை நான் பார்கக்க கூடியதாக இருக்கிறது.

உண்மையாகவே தமிழ் மக்களின் கோரிக்கைகள் வென்றெடுக்கபடுவதற்கு பரவலான ஐக்கியம் தேவை. அந்த பரவலான ஐக்கியத்தை தமிழரசுக் கட்சியால் கட்டியெழுப்ப முடியாது. ஏனையோர் எல்லோரும் சேர்ந்து அதனைச் செய்ய வேண்டுமாக இருந்தால் நிச்சயமாக அவர்கள் இதுவரையில் அவ்வாறான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருப்பார்கள்.

ஆனால் புளொட்டோ, ரெலோவோ அவ்வாறான ஒரு நிலையில் அவர்கள் இல்லை என்பது தான் வெட்ட வெளிச்சமான ஒரு விசயமாக இருக்கிறது.
அவர்களைப் பொறுத்தவரையில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து ஒன்று இரண்டு ஆசனங்களை கூடுதலாகப் பெற்றுக் கொள்ள முடியுமாக இருந்தால் அது தான் அவர்களுடைய தேவை. அந்தத் தேவை நிறைவேற்றப்படுமாக இருந்தால் அவர்களுக்கு அது போதுமானதாக இருக்குமென்றே நான் நினைக்கிறேன்.

இதே வேளையில் மாற்று அண குறித்தோ அல்லது மாற்றணியில் இணைவது குறித்தோ இதுவரை அவ்வாறு பேசுவதற்கான முய்றிசிகளை அவர்கள் எடுக்கவும் இல்லை. அவர்கள் வரவும் இல்லை. எதிர்காலத்தில் அவர்கள் வருவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவும் இல்லை. சில சமயங்களில் எங்களை ஒரு துரப்புச் சீட்டாக அதாவது தாங்கள் தமிழரசுக் கட்சியிலிருந்து சில விசயங்களை பெறுதற்காக அவர்கள் இதனைச் செய்வார்களே அதாவது தாங்கள் அங்கிருந்த வெளியேறி வேறு அணியில் இணையப் போவதாக கூறுவார்களே தவிர வேறேதும் நடைபெறப் போவதில்லை எனவும் தெரிவித்தார்..

.

No comments