சிறீகாந்தாவின் தனிக்கட்சி 15ம் திகதி!


எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலிற்கு முன்னதாக புதிய கட்சியை ஆரம்பித்துவிடவேண்டுமென்பதில் சிறீகாந்தா தரப்பு மும்முரமாகியுள்ளது.

ரெலோவின் அனுமதியில்லாமல் ஜனாதிபதி தேர்தலில் குதித்த எம்.கே.சிவாஜிலிங்கமும் இந்த கட்சியில் இணையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. புதிய கட்சிக்கு தமிழ் மக்கள் தேசிய கட்சி என பெயரிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

கட்சியின் தலைவராக என்.சிறிகாந்தா செயற்படுவார். செயலாளராக எம்.கே.சிவாஜிலிங்கமும், தேசிய அமைப்பாளராக சபா.குகதாசும் செயற்படுவார்கள். கட்சியின் கொடியில் கறுப்பு, மஞ்சள், பச்சை வர்ணங்கள் இருக்கும். கறுப்பு வர்ணம் தமிழர்களை குறிக்கும்.

கார்த்திகைப் பூ, செண்பகம் ஆகியவற்றை கொண்ட சின்னம் வடிவமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருவதாக அறியப்படுகிறது.

எதிர்வரும் 15ம் திகதி கட்சி தொடர்பான அறிவிப்பை விடுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

  

No comments