மாநகர முதல்வரானார் து.ஈசன்!


இலங்கை அமைச்சர்களது தமது பிரதி அமைச்சர்களிற்கு இடம்கொடுக்காது ஆள்வதாக சொல்லப்படுகின்ற நிலையில் வடக்கில் தமிழ் தரப்பிலும் அதே கதை தொடர்கின்றது.

முன்னாள் வடமாகாணசபை அவை தலைவர் , தனது பிரதி அவைத்தலைவரினை ஒரு நாளிலேனும் கதிரை ஏற அனுமதிக்கவில்லையென்ற நையாண்டி அனைவராலும் வைக்கப்பட்டது.

இந்நிலையில தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய யாழ்ப்பாண மாநகர பிரதி முதல்வர் து.ஈசன் இன்று முதல்வர் கதிரையில் இருந்து கொண்டார். 

யாழ்ப்பாண மாநகர சபையின் பிரதி முதல்வர் மு.ஈசன் இன்றைய யாழ்ப்பாண மாநகர சபையில் சிறப்பு அமர்வினை தலைமை தாங்கி நடத்தியிருந்தார்.கடந்த இரண்டு வருடங்களாக பிரதி முதல்வராக கடமையாற்றியும் எந்த ஒரு கூட்டத்திலும் அவர் தலைமையில் நடத்துவதற்கு சந்தர்ப்பம் கிடைத்ததில்லை.

இந்நிலையில் இன்றைய தினம் அவர் தலைமையில் சிறப்பு கூட்டம் இடம்பெற்றுள்ளது..முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் வெளிநாடு சென்றிருப்பதால் இச்சந்தர்ப்பம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

No comments