ஓதியமலை படுகொலை நினைவேந்தல் இன்று!


இலங்கை இனஅழிப்பு சிங்கள படைகளால் மேற்கொள்ளப்பட்ட ஒதியமலை படுகொலையின் 35ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று ஒதியமலை வாசிகசாலையில் நடைபெற்றது.

படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்கள் ஞாபகார்த்தமாக நிறுவப்பட்டுள்ள தூபி பகுதியில் கிராம மக்கள் அணிதிரண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இதனிடையே சிங்களப்படைகளால் படுகொலை செய்யப்பட்ட மக்களது நினைவஞ்சலி கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா உள்ளிட்ட பலரும் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

No comments