இரணைமடுவிலிருந்து மேலும் நீர் வெளியேற்றம்.

இரணைமடுக் குளத்தின் மேலதிகமாக 2 வான் கதவுகள் மாலை 6 மணியளவில் திறக்கப்பட்டன. தற்போது 6 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இரண்டு கதவுகள் 6 அங்குலமாகவும் இரண்டு வான் கதவுகள் 12 அங்குலமாகவும் இரண்டு கதவுகள் 18 அங்குலமாகவும் திறக்கப்பட்டுள்ளன.

வடக்கில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள பகுதிகளில் சிக்கியிருந்த பொது மக்களை; மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்;தும் பணிகள் மும்முரம் அடைந்துள்ளது. கடுமையான வெள்ள பாதிப்பினை சந்தித்துள்ள பகுதிகளிலிருந்து பொதுமக்கள் படகுகள் பொது இடங்களிற்கு நகர்த்தப்பட்டும் வருகின்றனர்.

இதனிடையே நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக வட.மாகாணத்திலுள்ள சுகாதார ஊழியர்கள் அனைவரின் விடுமுறையும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் விடுமுறையில் இருப்பவர்களை மீண்டும் கடமைக்கு திரும்புமாறும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் தெய்வேந்திரம் அறிவித்துள்ளார்.

கன மழைகாரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 2404குடும்பங்களை சேர்ந்த 7762 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் இதில் 320 குடும்பங்கள் 16 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
கரைச்சி பிரதேசத்தில் 120 குடும்பங்களும், பளையில் ஒரு குமும்பமும், கண்டாவளையில் 189 குடும்பங்களும், பூநகரியில் 10 என நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர்.

அத்தோடு கரைச்சி பிரதேசத்தில் 567 குடும்பங்களும், பளையில் 169 குமும்பங்களும், கண்டாவளையில் 1635 குடும்பங்களும், பூநகரியில் 33 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
இதனை தவிர பல இடங்களில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்களினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியின்பிரதான குளமான இரணைமடு குளத்திற்கு நீர்வரவு அதிகமாக காணப்பட்டமையினால் 31 அடியாக நீர் மட்டம் காணப்பட்ட போது குளத்தின் இரண்டு வான் கதவுகள் ஆறு இஞ்சி அளவுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் அனைத்து சிறிய குளங்களும் நிரம்பி வான் பாய்கின்றன.

குறிப்பாக வடமராட்சிகிழக்கு உள்ளிட்ட யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் ஏனைய மாவட்டங்களிலும் வெள்ள பாதிப்பு தொடர்கின்றது. 

No comments