மீண்டும் மணல் அகழ்வில் ஈபிடிபி மும்முரம்?


மணல் அகழ்வது மற்றும் மரங்கள் கொண்டு செல்வது தொடர்பில் கோத்தபாய அரசு தற்போது தடைகளை விலக்கியுள்ள நிலையில் ஈபிடிபி மீண்டும் வடமராட்சி கிழக்குப் பகுதிகளின் மணல் கொள்ளையில் மும்முரமாகியுள்ளது.

குறிப்பாக குடாரப்பு பகுதியில் மிக மோசமாக மணல் கொள்ளை இடம்பெறுவதாக குற்றஞ்சுமத்தியுள்ளது.
அதிலும் பக்கோ வகை கனரக இயந்திரம் மூலமாக நூற்றுக்கணக்கான டிப்பர் வாகனங்களில் ஏற்றப்படும் மணல் வெளி மாவட்டங்களுக்கு கடத்தப்படுகிறது.இது தொடர்பில் அப்பகுதி மக்களால் பொலிசாருக்கு முறையிட்டும் நடவடிக்கை ஏதும் இல்லையென தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் மக்கள் இன்று களத்தில் நேரடியாக இறங்கியதையடுத்து மக்கள் பிரதி நிதிகள் , பிரதேச செயலர் மற்றும் பொலிசாரும் களத்திற்கு விரைந்திருந்தனர்.

இவர்களைக் கண்டவுடன் கடத்தல் கும்பல் ஓடி ஒளித்ததாகவும், ஆனாலும் ஏனைய இடங்களில் எந்த தடைகளும் இன்றி மண் அகழ்வு மற்றும் கடத்தல் இது வரை தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே மண் அகழும் இடத்தில் வைத்தே கடத்தல்காரர்களை கைது செய்வதாக காவல்துறையினர் போராட்டகாரர்களிற்கு வாக்குறுதி வழங்கியுள்ளனர்.அத்துடன் இரண்டு டிரக்டரினை பருத்தித்துறை காவல்துறையினர் பிடித்துள்ளனர் ஆனால் தமக்கு உயர் மட்டத்திலிருந்து வாகனங்களை விடுவிக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதாக தெரியவருகின்றது.தமது கைகள் கட்டப்பட்ட நிலையே உள்ளதாகவும்  ஆனாலும் ரோந்து நடவடிக்கையை இன்று ஆரம்பிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments