கொன்சர்வற்றிவ் கட்சிக்கு வரலாற்று வெற்றி!

பிரித்தானியாவின் நாடாளுமன்ற தேர்தல் நேற்று (12) இடம்பெற்றது.

இந்தத் தேர்தலின் முடிவுகள் இன்று (13) வெளியாகியது.

இதன்படி ஆளும் கட்சியாக இருந்த கொன்சர்வற்றிவ் கட்சி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்துள்ளது.

மொத்தம் 650 ஆசனங்களில் பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் கொன்சர்வற்றிவ் கட்சி 363 ஆசனங்களை கைப்பற்றியது.

இதன்படி பொரிஸ் ஜோன்சன் மீண்டும் பிரதமராகியுள்ளார்.

அதேவேளை ஜெரேமி கர்பினின் தொழிலாளர் கட்சி 203 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

இது கடந்த தேர்தலில் பெற்ற ஆசனங்களை விட குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments