முல்லைக்கு தற்காலிக பாலம் அமைப்பு!


முல்லைதீவினை இணைக்கும் புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் வள்ளிபுனம் காளி கோவிலடியில் உடைந்த பாலத்தினை தற்காலிக பாலம் அமைத்து சீர்செய்யும் பணியில் இலங்கை இராணுவத்தின் பொறியியல் பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த பாலம் வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்டமையால் பரந்தனிலிருந்து முல்லைதீவிற்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இராணுவ பொறியியல் பிரிவினர் அதனை தற்காலிகமாக திருத்தி வருகின்றனர்.

No comments