நாட்டுப் பற்றாளர் அன்ரனி பிரான்சிஸ் சந்தியோகு அவர்களின் 8 ஆம் ஆண்டு கல்லறை வணக்க நிகழ்வு!

பிரான்சில் சாவடைந்த நாட்டுப் பற்றாளர் அன்ரனி பிரான்சிஸ் சந்தியோகு அவர்களின் 8 ஆம் ஆண்டு
கல்லறை வணக்க நிகழ்வு வில்நெவ் சென் ஜோர்ஜ் பகுதியில் நேற்று (16.12.2019) திங்கட்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு இடம்பெற்றது.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் பிரான்சு ஊடகமையத்தினால் நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் பொதுச்சுடரினை ஊடகமையத்தின் முக்கிய செயற்பாட்டாளர் சோதி  அவர்கள் ஏற்றிவைக்க, ஈகைச்சுடரினை நாட்டுப்பற்றாளர் அன்ரனி பிரான்சிஸ் சந்தியோகு அவர்களின் துணைவியார் ஏற்றிவைத்தார்.

 நாட்டுப்பற்றாளர் அன்ரனி பிரான்சிஸ் சந்தியோகு அவர்களின் புதல்வி கல்லறைக்கான மலர்வணக்கத்தினை செலுத்தியிருந்தார். அகவணக்கத்தைத் தொடர்ந்து அனைவரும் சுடர் ஏற்றி மலர்வணக்கம் செய்தனர்.

No comments