181,126 பேர் தகுதி பெற்றனர்

இன்று (27) இரவு வெளியான உயர்த பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் இம்முறை 181,126 பேர் பல்கலைக்கழக நுழைவுக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர்.

அத்துடன் 71 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீள்பரிசீலனை விண்ணப்பங்களை ஜனவரி மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

No comments