வவுனியாவில் சஜித்துக்கான பெண்கள் மாநாடு

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் ஆலோசனையில் வவுனியாவில் மகளீர் ஒன்று கூடல் நிகழ்வு நடைபெறுகிறது.
இந்த மாநாடு வவுனியா தனியார் விடுதியொன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுவருகிறது.
வவுனியா மாவட்டத்தில் பெண்கள் அமைப்பின் தலைவிகள், கிராம மடட்ட அமைப்புக்களின் உறுப்பினர்கள், பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பத் தலைவிகள் மற்றும் பல பெண்கள் கலந்துகொண்ட குறித்த மாநாட்டில் பெண்களுக்கான பல நலத்திட்டங்கள் தொடர்பாக வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
இம்மாநாட்டில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பாரியார் ஜலனி பிரேமதாச, ரோசி சேனாநாயக்க, விஜயகலா மகேஸ்வரன், வவுனியா நகரசபை உறுப்பினர் ஏ.ஆர்.எம் லரிப் அப்துல்பாரி, முன்னாள் வட. மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதீயுதீன் முத்து முகமது உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

No comments