திருமண வரவேற்ப்பு நிகழ்ச்சியில் துப்பாக்கிகளுடன் தோன்றிய தம்பதிகளால் பரபரப்பு!

இந்தியாவின் நாகலாந்து மாநிலத்தில்  அரசை எதிர்த்து பல போராளிக் குழுக்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றன. அவற்றுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்பட்டாலும் அவ்வப்போது அந்த குழுக்கள் எதிர்ப்பு குரலை ஒலித்து வருகின்றன.
இந்நிலையில், என்.எஸ்.சி.என்(யு) என்ற போராளிக் குழுவின் தலைவர் போகட்டோ கிபா என்பவரின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கடந்த 9ம் தேதியன்று நடைபெற்றது. அதில் மணமகனும், மணமகளும் ஏ.கே.56, எம்.18 ஆகிய இயந்திர துப்பாக்கிகளுடன் மக்களிடையே தோன்றியுள்ளனர். துப்பாக்கிகளுடன் அவர்கள் இருப்பதை பார்த்து வரவேற்பில் கலந்து கொண்டவர்கள் மிரட்சியடைந்தனர்.
இந்த காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. ஏற்கனவே போகட்டோ கிபா ஒரு முறை தன்னை பற்றி அவதூறாக எழுதும் பத்திரிகையாளர்களை கொல்வேன் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்தது பெரிய சர்ச்சையானது. இந்நிலையில், இந்த காணொளி தற்போது நாகலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

No comments