ஆவா வினோத் நீதிமன்றில் சரண்

யாழ்ப்பாணத்தில் பல்வேறு வாள்வெட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் ஈடுபட்ட பிரதான நபரென கருதப்பட்ட ஆவா குழு கு.வினோத் மல்லாகம் நீதிமன்றில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் பல வருட காலமாக ஆவா குழு என்ற அமைப்பினால், பல்வேறு வாள்வெட்டுக்கள் இடம்பெற்றதுடன், பல கொள்ளைச் சம்பவங்களும் இடம்பெற்றன. இக்குழுவின் பிரதான நபரென கருதப்பட்ட ஆவா வினோத், தலைமறைவாகியிருந்த நிலையில் இன்று (05) நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.

அச்சுவேலிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தின் குற்றவாளியாக கருதப்பட்ட இவர் அந்த வழக்கில் மல்லாகம் நீதிமன்றில் சரணடைந்துள்ளார். சரணடைந்த இவரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஏனைய குற்றங்களுடன் தொடர்புடைய வழக்குகள் தொடர்பாகவும் எந்தெந்த பொலிஸ் நிலையத்தில் வழக்கு விசாரணைகள் நிலுவையில் உள்ளன என்பது தொடர்பான அறிக்கைகளும் அந்தந்த பொலிஸ் நிலையங்களினால் மல்லாகம் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்படுமென்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

No comments