சஜித்தும் காசு கொண்டுவருவாராம்?

வடக்கையும், கிழக்கையும் அபிவிருத்தி செய்வதற்கான வெளிநாட்டு உதவியைப் பெற்றுக் கொள்வதற்காக, கொடை நாடுகளின் இரண்டு மாநாடுகளை கூட்டப் போவதாக, புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு, முள்ளியவளையில் நேற்று தேர்தல் பரப்புரைப் பேரணியில் உரையாற்றிய போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
தாம் அதிபராகப் பொறுப்பேற்றதும், கூடிய விரைவில் இந்த மாநாடு கூட்டப்படும் என்றும் அவர் கூறினார்.
வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக, அதிபர் அபிவிருத்தி செயலணிகளில் இரண்டு புதிய சிறப்பு பிரிவுகள் உருவாக்கப்படும் என்றும், வடக்கு கிழக்கு அபிவிருத்தியை தாமே தனிப்பட்ட முனையில் கவனிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments