கோத்தாவும் மேலும் புதிய சவால்!


சஜித்தை தொடர்ந்து தைரியம் இருந்தால் விவாதிக்க வருமாறு ராஜபக்ஸ தரப்பினருக்கு சஜின் வாஸ் குணவர்தன பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

ராஜபக்ஸ தரப்பினர் மேற்கொண்ட ஊழல்கள் குறித்த அனைத்துத் தகவல்களும் தன்னிடம் இருப்பதாக சஜின் வாஸ்குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அழைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சஜித் பிரேமதாஸ அழைப்பதைப் போல் அவர்களின் குடும்பத்தில் அனைவரும் இந்த விவாதத்திற்கு வர முடியூம் எனவூம், தான் தனியாக இந்த விவாதத்திற்கு வருவதாகவூம் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்த விவாதம் எதிர்வரும் 13ஆம் திகதிக்கு முன்னர் விவாதத்திற்கு வரவேண்டும் எனவூம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே சஜித் பகிரங்கமாக இருதடவையும் கடித மூலமாக ஒரு தடவையும் பகிரங்க சவாலினை கோத்தாவிற்கு விடுத்த போதும் கோத்தா மௌனம் காத்துவருவது குறிப்பிடத்தக்கது.

No comments