சம்பந்தன் சஜித்திற்கு:கொழும்பு திரும்பும் சஜித்!


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், திருகோணமலையில் சஜித்திற்கு வாக்களித்திருந்தார்.

புனித மரியாள் கல்லூரி வாக்களிப்பு நிலையத்தில், இன்று காலை தனது வாக்கினை பதிவு செய்திருந்தார்.

இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு சுமூகமான முறையில் நடைபெற்று வருவதாக தெரியவருகின்றது.

யாழ்ப்பாணத்தில் அடை மழை இடையில் புகுந்து கொண்டமையால் வாக்களிப்பு சிறிது மந்தமாகியுள்ளது.

இதனிடையே அம்பாந்தோட்டையில் வாக்களித்து விட்டு சஜித் புகையிரத வண்டியில் வீடு திரும்பிக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

No comments