கவிழ்ந்தது ஈழம் பிக்பொஸ்:கூட்டமைப்பு சஜித்திற்கு ஆதரவு!


இலங்கை தமிழரசு கட்சி, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவை ஆதரிக்க தீர்மானித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதாக, இலங்கைத் தமிழரசுக் கட்சி ஏகமனதாக முடிவெடுத்துள்ளதாக உத்தியோகபூர்வமாக இன்று அறிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் கலந்துரையாடி, இறுதி முடிவை அறிவிக்கும் அதிகாரம் சம்பந்தனிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இதன் மூலம் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களை முன்னிறுத்தி நடத்தப்பட்ட சந்திப்புக்கள்,13அம்ச கோரிக்கையென அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

ஏற்கனவே எம்.கே.சிவாஜிலிங்கம் கூட்டமைப்பு இத்தகையதொரு முடிவையே எடுக்குமென தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments