தமிழ் அரசுக் கட்சியின் அதிரடி அறிவிப்பு வெளியானது

தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க தீர்மானித்துள்ளது.

இதனை சுமந்திரன் எம்பி சற்றுமுன் அறிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு அக்கட்சியின் வவுனியா மாவட்டக் கிளை அலுவலகமான ‘தாயகம்’ பணிமனையின் பிரதான கேட்போர் கூட்டத்தில் நடைபெற்று வருகின்றது.

இதன்போதே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் கலந்துரையாடி, இறுதி முடிவை அறிவிக்கும் அதிகாரம் சம்பந்தனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

No comments