தமிழர் வாக்குகளால் சஜித் முன்னணியில்?


யாழ். மாவட்டம் மானிப்பாய் தேர்தல் தொகுதி மற்றும் உடுப்பிட்டித் தேர்தல் தொகுதி வாக்குப் பதிவில் நீண்ட வாக்குகள் வித்தியாசத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச முன்னிலையிலுள்ளார்.
இதன்படி, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்டபாளர் சஜித் பிரேமதாச 31,369 வாக்குகளையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்டபாளர் கோத்தாபய ராஜபக்ஷ 1,859 வாக்குகளையும், ஆரியவன்ச திஸாநாயக்க 790 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
யாழ். மாவட்டம் உடுபிட்டித் தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவிலும் சஜித் பிரேமதாச முன்னிலையிலுள்ளார்.
இதன்படி, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்டபாளர் சஜித் பிரேமதாச 19,307 வாக்குகளையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்டபாளர் கோத்தாபய ராஜபக்ஷ 1,334 வாக்குகளையும், எம்.கே.சிவாஜிலிங்கம் 942 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

No comments