சிறிசேனவின் இறுதி உரை இன்று

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஆட்சிக் காலத்தில் பங்கேற்கும் இறுதி நாடாளுமன்ற அமர்வு இன்று(வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது.
இதன்போது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விசேட உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 16ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்கவுள்ளார்.
அதேபோன்று ஆட்சியில் உள்ள ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்கட்சி தலைவர் ஆகியோர் போட்டியிடாத ஜனாதிபதி தேர்தலாக இந்த ஜனாதிபதி தேர்தல் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments