ரஜினியை விட சாதித்த தமிழர்கள் இருக்கிறார்கள்: வள்ளுவனை அவமதித்தால் விளைவுகள் ஏற்படும்!

திரையுலகில்  சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் நடிகர் ரஜினிகாந்துக்கு ICON OF GOLDEN JUBILEE என்ற விருது வழங்கப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் கோவாவில்  நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறும் சர்வதேச திரைப்பட விருது விழாவில் இந்த விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ரஜினிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்ற நிலையில் ரஜினிக்கு விருது அறிவிக்கப்பட்டதற்கு பல்வேறு  விமர்சனங்களும் எழுந்துள்ளது.


அந்த வகையில் இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ரஜினிக்கு விருது கொடுத்ததற்கு பாராட்டுக்கள். ஆனால்  அவரை விட சாதித்த தமிழர்கள் கமல் ஹாசன், இளையராஜா, பாரதிராஜா போன்றவர்கள் திரைத்துறையில் இருக்கிறார்கள். ரஜினிகாந்த் அவர்களுக்கு வேண்டப்பட்டவர். அதனால் இந்த விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது' என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், திருவள்ளுவருக்கு காவி அணிவித்து பொதுமறையை மறந்து தங்கள்  வயப்படுத்த நினைக்கிறார்கள் . வள்ளுவரை அவமதித்தால், மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்' என்றார். 

No comments