பரபரப்பாகின்றது வடக்கு!


இலங்கையின் வடபுலமும் தேர்தல் களத்தில் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
முழத்துக்கொரு இராணுவ காவலும் வீதியெங்கும் காவல்துறையுமென வடக்கு பரபரப்பாகியுள்ளது.

இதனிடையே புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பங்கேற்கும்  தேர்தல் பிரசார கூட்டம்,  முல்லைத்தீவு முள்ளியவளை விநாயகர் விளையாட்டு மைதானத்தில் இன்று (04)  இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில், மைதானம் மற்றும் முள்ளியவளை தொடக்கம் முல்லைத்தீவு வரையான  வீதிகளில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சோதனைகளின் பின்னர் மக்கள் மைதான வளாகத்துக்குள்  அனுமதிக்கப்பட்டுவருகின்றனர்.

இதனிடையே கோத்தபாய ஆதரவு தரப்பு ரத்துலிய தேரர் யாழில் பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments