கோத்தா எவ்வளவு துவேசமானவன்: சரா

எனது ஆசிரியர் ஒருவர் கடத்தப்பட்ட போது மறைந்த முன்னாள் எம்பி அஸ்வர் என்னை கோத்தாபயவிடம் கூட்டிச் சென்றார். அங்கே என்னை காட்டி இவர் பேச வந்துள்ளார் என்று அஸ்வர் சொல்கிறார். அதற்கு கோத்தாப "தன்னுடைய மயிரெல்லாம் கையில் இருந்து சிலிர்க்கிறது" எனச் சொன்னார். பாருங்கள் எவ்வளவு துவேசமானவன்.

இவ்வாறு சரவணபவன் எம்பி இன்று (13) மாலை கிட்டு பூங்காவில் இடம்பெற்ற தேர்தர் பிரச்சாரத்தில் தெரிவித்தார். மேலும்,

கோத்தாபய என்று சொல்லும் போது நினைவுக்கு வருவது நாம் இழந்தவர்களே. 3, 4 பேருந்தில் ஏற்றிச் செல்லப்பட்டவரகள் எங்கே?. ஒரு சிங்கள ஊடகவியலாளர் என்னிடம் ஒன்றைச் சொன்னார். அது எவ்வளவுக்கு ஆதாரமுள்ள விடயம் என்று தெரியவில்லை. பேருந்தை கிரேனால் கட்டி கடலுக்குள் போடப்பட்டு திருப்பி எடுத்து சென்றார்கள் என அவர் சொன்னார். பேருந்துக்குள் இருந்த அத்தனை பேரும் மாண்டார்கள். - என்றார்.

No comments