கோத்தா காசிலேயே புறக்கணிப்பு நாடகமென்கிறார் சரத்?


இலங்கையின் வடபுலத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளிற்காக வருகை தந்திருந்த சஜித் பிறேமதாச சர்ச்சைக்குரிய இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றி வாய் திறக்க மறுத்துள்ளார்.

தனது மன்னார்,கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண தேர்தல் பரப்புரைகளின் போது அபிவிருத்தி பற்றி மட்டுமே கருத்து வெளியிட்ட சஜித் பிறேமதாசா மறுபுறம் மன்னார் ஆயரை சந்தித்து பேசியுமிருந்தார்.

மாவட்ட ரீயிலும் கிராம ரீதியிலும் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளினை முன்னெடுக்க திட்டமிட்டிருப்பதாகவும் சஜித் பிறேமதாச தெரிவித்திருந்திருந்தார். 

தமிழ் மக்களிற்கு சமஸ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை வழங்க சஜித் தயாராகியிருப்பதான கோத்தபாய ராஜபக்ச தரப்பின் பிரச்சாரங்;கள் உச்சமடைந்துள்ள நிலையிலேயே சஜித் தனது வாய்க்கு பூட்டுப்போட்டுள்ளார்.
இதனிடையே யாழ்ப்பாணத்தில் சஜித் பிறேமதாசவுடன் பிரச்சார நடவடிக்கைகளிற்கு வருகை தந்திருந்த முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா தானே சஜித் அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக இருப்பேன் என தெரிவித்தார்.

இதனிடையே கோத்தா தரப்பு சிலருக்கு பெருமளவு பணத்தை வழங்கி ஜனாதிபதி தேர்தல் களத்தில் இறக்கியிருப்பதாக அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.அதேபோன்றே தேர்தல் புறக்கணிக்க தமிழ் மக்களை தூண்டவும் பணத்தை கோத்தபாய தரப்பு சிலருக்கு அள்ளிவீசியிருப்பதாகவும் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

No comments