யாழ் நாக விகாரையில் ரணில்

யாழ்ப்பாணத்திற்கு விஐயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, யாழ்.நாக விகாரையின் விசேட வழிபாடுகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஈடுபட்டுள்ளார்.
இதன்போது, நாகவிகாரையின் விகாராதிபதியை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றிலும் பிரதமர் ஈடுபட்டுள்ளார்.
நாகவிகாரையின் விசேட வழிபாடுகளில் அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, ராஜித சேனாரத்ன உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும்  யாழில், இன்று நடைபெறவுள்ள பல்வேறு கூட்டங்களிலும் பிரதமர் ரணில் கலந்துகொண்டு உரை நிகழ்த்த உள்ளார்.
ஐனாதிபதி தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்காக நேற்று வடக்கிற்கு விஐயம் செய்த பிரதமர் தலைமையிலான குழுவினர் யாழில் தங்கியிருந்து பிரச்சாரங்களை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments