ரஜினி மழுப்பிப் பேசுவது, அழுத்தத்தின் அறிகுறி;

ரஜினிகாந்த் ஏதோ அழுத்தத்தில் உள்ளார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாபர் மஸ்ஜித் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கின்றது சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டது. அல்லாமல் சாஸ்த்திரங்கள் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. நீதியை நிலைநாட்டுவதற்காக வழங்கப்பட்ட தீர்ப்பு என்பதை விட  அமைதியை நிலை நாட்ட வழங்கப்பட்டதாக உள்ளது. இந்த தீர்ப்பை பற்றி பிரதமர் மோடி கருத்து கூறும்போது இதை யாரும் வெற்றி பெற்றதாகவோ தோல்வியடைந்ததாகவோ எடுத்துக்கொள்ள முடியாது என கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் வெற்றி பெற்றவர்கள் கூறும் கருத்தையே அவரும் கூறியுள்ளார். இந்த தீர்ப்பின் மூலம் உச்சநீதிமன்றத்தின் நம்பகத் தன்மை கேள்விகுறியாகியுள்ளது.

அயோத்தி வழக்கில் சீராய்வுக்கு சென்றால் நீதி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் பொறுமை காப்பதும் அமைதி காப்பதும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள ஒவ்வொருவரின் கடமையாகும். நீதி சார்பாக வழங்கப்பட வேண்டிய தீர்ப்பு மதசார்பில் வழங்கப்பட்டுள்ளது. எனவே மதசார்பின்மை காப்பாற்றப்படவில்லை. அரசியல் அமைப்பு சட்டம் பாதுகாக்கப்படவில்லை. இது ஏமாற்றத்தை தருகின்றது. உள்ளாட்சி தேர்தலை திமுகவுடன் இணைந்து சந்திக்கவுள்ளோம்.
நடிகர் ரஜினிகாந்த் திருவள்ளுவர் மீதும் எனது மீதும் காவிச்சாயம் பூசும் முயற்சி செய்யப்பட்டுவருகிறது என்று கூறிவிட்டு பிறகு சற்று மழுப்பலாக பதில் சொல்லியுள்ளார்.  ரஜினிகாந்த் விழிப்பாக இருக்கின்றார் எச்சரிக்கையாக இருக்கின்றார் என்றாலும் ஏதோ ஒரு அழுத்தத்தில் இருக்கின்றார். என்பதை புரிந்துகொள்ள முடிகிறது” என பேசினார்.

No comments