வடக்கு வாக்குகளிற்கான கடைசி வலைவீச்சு?


தேர்தல் பரபரப்புக்கள் மத்தியில் கொழும்பில் வைத்து 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கடற்படையினருக்கு எதிராக நடவடிக்கைகக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.அத்துடன் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 7 இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கும் எதிராக நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும், கடற்படை மற்றும் இராணுவ தளபதிகளுக்கும் சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக தெரியவருகின்றது.

சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள படையினரை தான் ஜனாதிபதியாகியதும் விடுவிக்கப்போவதாக பிரதான வேட்பாளர்களுள் ஒருவராக கோத்தபாய தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிய கொடவை காணாமல் ஆக்கிய சம்வத்துடன் தொடர்புடைய புலனாய்வு அதிகாரிகள் பலரும் வடக்கில் நடைபெற்ற ஆட்கடத்தல்கள் மற்றும் காணாமல் ஆக்குதல்களுடன் தொடர்புடையவர்களென அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் மேற்கொண்ட கடத்தல்கள்,கொலைகள் அனைத்துமே அப்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோத்தபாயவின் உத்தரவிலேயே மேற்கொள்ளப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர்கள் மீது குற்றச்சாட்டுக்கனை முன்வைப்பதால் வடகிழக்கு தமிழ் மக்களது வாக்குவங்கியை பெற்றுக்கொள்ள ரணில் அரசு முற்பட்டுள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

No comments