ஊடக படுகொலையாளிகள் விடுதலை!


ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட உட்பட பல ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.இதனிடையே அவர்களுக்கு எதிராக கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (27) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது,  9 பேருக்கு எதிராக இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதுடன், சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, இந்த வழக்கு எதிர்வரும் 18ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை இரசியமாகவும் சட்டவிரோதமாகவும் தடுத்துவைக்கும் நோக்கில், கடத்தியமை மற்றும் கொலை செய்தமை உள்ளிட்ட 17 குற்றச்சாட்டுகளின் கீழ் இலங்கை இராணுவத்தின் மின்னேரியா படைமுகாமை சேர்ந்த 9 படை அதிகாரிகள் கைதாகியிருந்தனர்.

குறித்த புலனாய்வு அதிகாரிகளே வடக்கிலும் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களென அடையாளப்படுத்தபட்டிருந்தனர்.

பிணை வழங்கப்பட்ட பிரதிவாதிகள் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்துள்ள நீதிமன்றம், அவர்களின் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

No comments