கோத்தா மீது சேறு பூசல் - மஸ்தான் கதறல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய மீது சேறு பூசும் நடவடிக்கையை எதிரணி மேற்கொள்கிறது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.
வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “கோட்டாபய ராயபக்ஷ மீது சேறு பூசும் நடவடிக்கையினை எதிரணியினர் மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் தங்களது தோல்வியை தாங்கமுடியாமல் மன விரக்தியில் உள்ள நிலையிலேயே இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்கின்றனர்.
தற்போது வெள்ளை வான் தொடர்பாக ஒரு பிரச்சினையை கிழப்பியுள்ளனர். இவ்வளவு நாளும் யாருடைய ஆட்சி இடம்பெற்றது. குறித்த நபரிடம் வாக்குமூலத்தை பெற்று அவரை ஏன் கைது செய்யவில்லை?
கடத்தி குளத்தில் போட்டார்களாம் ஆனால் எந்த குளம் என்று தெரியாது. இவை எல்லாம் பிழையான செயற்பாடாக அமைந்துள்ளதுடன், கோட்டாமீது சேறு பூசி அவரது வெற்றி வாய்ப்பை மழுங்கடிக்கும் முயற்சியாகவே நான் பார்க்கிறேன்” என மேலும் தெரிவித்தார்.

No comments