வீதியை மூடவில்லை: கொண்டாடும் கோத்தா?

அரச அலுவலகங்களில் தனது புகைப்படத்தை காட்சிப்படுத்த வேண்டியதில்லையென தெரிவித்த கோத்தபாய வீதிகளை துமூடி கொண்டாட்டங்களை நடத்தவும் தடை விதித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்‌ஷ புதிய ஜனாதிபதியாக தனது கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வு, இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற போதிலும், காலி முகத்திடல் வீதி, மூடப்படவில்லை.
இதற்கு முன்னர், ஜனாதிபதி செயலகத்தில் இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறும் போது, குறித்த வீதியுடனான போக்குவரத்துக்கு தடையேற்படுத்தப்படும் நிலையில், இன்று வழமைப் போலவே அங்கு வாகனப் போக்குவரத்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

No comments