மாவீரர் தின எழுச்சிக்கு தயாராகின்றது தேசம்:சலசலப்புக்கள் வேண்டாம்!


மாவீரர் தினத்தை குழப்ப முற்படுகின்ற சிறுசம்பவங்களை முன்னிலைப்படுத்த வேண்டாமென பகிரங்க கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. 27ம் திகதிய மாவீரர் தினத்தைய நிகழ்விற்கு குந்தகம் விளைவிக்கும் தூண்டல் நடவடிக்கைகள் தொடர்பில் முன்னுரிமை வழங்கவேண்டாமென ஊடகங்களிற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே முள்ளிவாய்க்காலில் மாவீரர் இ துயிலுமில்ல துப்பரவு பணியில் ஈடுபட்ட உழவு இயந்திர உரிமையாளர் இன்றையதினம் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

நாளை மறுதினம் மாவீரர் தினம் இடம்பெறும் நிலையில்,
மாவீரர் துயிலுமில்லங்களை துப்பரவு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. ஏற்கனவே தீருவிலில் துப்பரவு பணியில் ஈடுபட்டவர்களை பொலிசார் வீடியோ படம் பிடித்திருந்தனர்.

இந்தநிலையில், இறுதியுத்தத்தில் உயிரிழந்த விடுதலைப்புலிகள் அமைப்பினரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில், மாவீரர் தினத்தை அனுட்டிப்பதற்காக துப்பரவு பணிகள் நேற்று நடந்தது. இதன்போது அங்கு சிஐடியினர் சென்று, துப்பரவு பணியை நிறுத்துமாறு எச்சரித்ததாக பொதுமக்கள் குறிப்பிட்டனர்.

துயிலுமில்ல துப்பரவு பணியில் நேற்று ஈடுபட்ட உழவு இயந்திரத்தின் சாரதி, உரிமையாளரை இன்று காலையில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு பொலிசார் அறிவித்துள்ளனர்.

ஆயினும் தடைகளை தாண்டி துப்புரவு பணிகள் தொடர்கின்றன.

No comments