அச்சமின்றி நினைவேந்தலிற்கு வர அழைப்பு!


விடுதலை வீரர்களை நினைவுகூர அனைவரையும் அணி திரள முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அழைப்புவிடுத்துள்ளார்.

இதேவேளை வடமராட்சி கிழக்கு பொது அமைப்புக்களும் இதே கோரிக்கையினை விடுத்துள்ளன.

யாழ்.ஊடக அமையத்தில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இத்தகைய கோரிக்கையினை அவர்கள் விடுத்துள்ளனர்.

இதனிடையே முன்னாள் முதலமைச்சர் விடுத்துள்ள ஊடக குறிப்பில் இன்று அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் வென்றெடுப்பதற்குமாக தமது இன்னுயிர்களைஈகம்  செய்தவிடுதலைவீரர்களைநினனவுகூர்ந்துநினைவுநாள் அனுஸ்டிப்பது வரலாற்றுகாலம் தொட்டு உலகம் பூராகவும் மனித நாகரிகத்தின் முக்கிய பண்பாககாணப்படுகின்றது.

விடுதலை வீரர்களை நினைவு கூர்ந்து அவர்கள் சார்ந்த ஒரு ஒட்டு மொத்தமக்கள் கூட்டமும் வருடாவருடம்  நினைவு நாளை அனுஸ்டிப்பது அந்த விடுதலை வீரர்களின் தியாகத்தை நன்றியுடன் நினைவு கூருவதற்கு மட்டுமன்றி அவர்களின் உறவினர்களின் உள்ளக் குமுறல்கள் மற்றும் வேதனைகளுக்கான ஒரு ஆறுதலை அளிப்பதற்கும் வழிவகுக்கிறது.  

ஆனால்,யுத்தம்நடைபெற்ற போது தமது உயிர்களை நீர்த்த விடுதலை வீரர்களை கார்த்திகை மாதத்தில் நினைவு கூருவதற்கு கடந்த காலங்களில் இலங்கையில் தமிழ் மக்களுக்குபல்வேறுதடைகளும் இடைஞ்சல்களும் நாகரிகமற்றமுறையில் ஏற்படுத்தப்பட் டுவந்திருக்கின்றன. இருந்த போதிலும்,சட்டம் ஒழுங்குமற்றும் அமைதி ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படாத முறையில் மிகவும் அமைதியான முறையில் உணர்வுபூர்வமாக கார்த்திகை மாதநினைவு கூரலை எமது மக்கள் செய்துவருகிறார்கள்.
நாளை 27 ஆம் திகதி வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் நினைவுநாள்  நிகழ்வுகள் அமைதியான முறையில் செய்யப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அறிகின்றேன். அமைதியானவழியில் உரிய சட்டவழிமுறைகளை பின்பற்றி எமது மக்கள் இந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொள்ள வேண்டும் என்று வேண்டிக்கொள்கின்றேன். நாட்டில் நிலையான சமாதானத்தையும், இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு பாடுபடப்போவதாக கூறியிருக்கும் புதிய அரசாங்கம் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் எந்த இடையூறுகளும் இன்றி நடைபெறுவதற்கு ஆவன செய்யும் என்று எதிர்பார்க்கிறேன்.

எமது மக்கள் சுதந்திரமாகவும் சகலஉரிமைகளுடனும் வாழவேண்டும் என்றஉயரியசிந்தனையுடன் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த எமது விடுதலை வீரர்கள் எமது மக்களின் மனங்களில் எப்பொழுதுமே வாழ்ந்துகொண்டிருப்பரஎன நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

No comments