நான் சர்வாதிகாரி இல்லை! கோத்தா

நான் சர்வாதிகாரி, இனவாதி எனச் சொல்லப்படுவது தவறு. அது போர்க் காலத்தில் சித்திரிக்கப்பட்டது. நான் 20 ஆண்டுகள் இராணுவத்தில் இருந்தேன். பயங்கரவாதிகளுக்கு எதிராக போரிட்டேன் என்பதே உண்மை என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்தார்.

எஸ்என்எஸ் ஆங்கில ஊடகத்திற்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனை தெரிவித்தார். மேலும்,

12 ஆண்டுகள் அமெரிக்காவில் இருந்த பின்னர் பாதுகாப்பு செயலாளராக நாட்டுக்கு வந்தேன். என்னை பாதுகாப்பு செயலாளராகவே மக்கள் அங்கீகரித்தனர். அதனால் இந்த மனிதர் சர்வாதிகாரி என்று மக்கள் நினைக்கின்றனர்.

நான் சிறந்த மனிதன். இனவாதி இல்லை. நான் ஒரு சமூகத்திருக்கு சார்பாக மட்டுமே வேலை செய்ய மாட்டேன். அதனாலேயே தமிழ், முஸ்லிம் மக்களை என்னுடன் இணையுமாறு அழைத்தேன்.

இது சிறிய நாடு, வளரும் நாடு. மக்கள் எமக்கு உதவ வேண்டும். என் வழியில் தடைகள் வைக்க கூடாது. அது யாருக்கும் உதவாது. - என்றார்.

No comments