ஜேர்மன் ஜனாதிபதி மகன் பேர்லினில் குத்திக் கொலை!

முன்னாள் ஜெர்மன் அதிபர் ரிச்சர்ட் வான் வெய்சேக்கரின் மகன் பேர்லினில் உள்ள ஒரு மருத்துவமனையில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது குத்திக் கொல்லப்பட்டுள்ளார்.

அந்த மருத்துவமனையில் அவர் தலைமை மருத்துவராக பணிபுரிந்தார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை மாலை ஸ்க்லோஸ்பார்க்-கிளினிக் என்ற இடத்தில் மருத்துவமனையில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது பார்வையாளர்களிடமிருந்து ஒருவர் திடீரென குதித்து ஃபிரிட்ஸ் வான் வெய்சேக்கரை கத்தியால் குத்தியுள்ளார். தாக்குதலில் ஈடுபட்ட 57 வயது நபர் உடனடியாக கைது செய்யப்பட்டார்.

சம்பவ இடத்தில் இருந்த ஒரு அதிகாரி தாக்குபவரைத் தடுக்க முயன்றபோதும் அவரும்  பலத்த காயமடைந்தார் என்றும்  தாக்குதல் நடத்தியவர் அங்கிருந்த பொதுமக்களால் பிடிக்கப்பட்டு  காவல்துறையிடம்  ஒப்படைக்கப்பட்டார்.

 "தாக்குதல் நடத்தியவரின் நோக்கம் குறித்து நாங்கள் இன்னும் எதுவும் கூற முடியாது," என்று காவல்துறை  செய்தித் தொடர்பாளர் மைக்கேல் காஸன் கூறினார், சந்தேக நபர் இன்னும் விசாரிக்கப்பட்டு வருகிறார். சந்தேக நபருக்கு முந்தைய குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை. என காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

No comments