சுமந்திரனின் கருத்தை திரித்த இனவாத ஊடகங்கள்

தேர்தல் பிரசார மேடையில் தெரிவித்த கருத்தைத் திரிபுபடுத்தி செய்தி வௌியிட்ட 3 பத்திரிகைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
பொய்யான அறிக்கைகளை வெளியிட்டதற்காக 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் 3 வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அந்த செய்திகள் இனவாதம், விரோதம் அல்லது வன்முறையை தூண்டுவதாக அமைந்திருக்கும் இன வெறுப்பின் பிரசாரம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அந்த பத்திரிகைகள் தனது மறுப்பை வெளியிட நடவடிக்கை எடுக்குமாறும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் எம்.ஏ.சுமந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
சஜித்துக்கு வாக்களித்தால் மட்டுமே சிங்களவரை தேற்கடிக்க முடியும் என்று சுமந்திரன் எம்பி தெரிவித்ததாக மவ்பிம, சிலோன் ருடே, அருன பத்திரிகைகள் போலிச் செய்தி வெளியிட்டுள்ளன.

No comments