வாக்குப்பெட்டிகளை கொண்டு செல்லும் பணி சகல மாவட்டத்திலும் மும்முரம்

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இருந்து மன்னார் மாவட்டத்தில் உள்ள 76 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் கொண்டுச் செல்லும் நடவடிக்கை இன்று (15) காலை 8 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.

மன்னார் மாவட்டச் செயலக பகுதியில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டச் செயலக பிரதான வீதி போக்குவரத்துக்காக மூடப்பட்டுள்ளதோடு, மாற்றுப்பாதையூடாக போக்குவரத்து இடம்பெற்று வருகின்றது.

அம்பாறை

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு அம்பாறை  மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள், அம்பாறை ஹாடி உயர்  தொழிநுட்ப வளாகத்தில் இருந்து  வாக்குசாவடிகளுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இருந்து வாக்களிப்பு நிலையங்கள் நோக்கி எடுத்துச் செல்லுகின்ற பணிகள் இன்று (15) காலை முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி

இன்று (15) காலை 7.45 மணிமுதல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்திலிருந்து, வாக்கு பெட்டிகள்,  வாக்களிப்பு  நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டுள்ளன.


No comments