வாக்களிப்பு நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையில் இடம்பெறவுள்ளன.

இதற்கமைய வாக்காளர்கள் அனைவரும் சரியான ஆவணங்களுடன் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று, உரிய நேரத்தில் தமது வாக்குகளைப் பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தல் நடவடிக்கைகளை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்காக 60 ஆயிரத்து 175 பொலிஸார் மற்றும் 8 ஆயிரத்து 80 சிவில் பாதுகாப்பு ஊழியர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

No comments