தேர்தல் ஆணைக்குழுவில் முற்றுகிறது குடுமிப்பிடி?


இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரிய மற்றும் உறுப்பினர் ஜீவன் கூல் இடையேயான முரண்பாடு உச்சமடைந்துள்ளது.தேர்தல் ஆணைக்குழுவில் தொடர்ந்து இணைந்திருக்க முடியாதென உறுப்பினர்கள் ஜரோப்பிய கண்காணிப்பாளர்கள் வரை முறைப்பாடு  செய்துள்ளமை வெளிவந்துள்ளது.

இதனிடையே கபே அமைப்பினை தேர்தல் பணியில் ஈடுபட முடியாது என தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் தனித்து எடுத்த முடிவினை ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் குறித்த தடை உடனடியாகவே நீக்கப்பட்டதாக அதன் இணைப்பாளர் தெரிவித்தார்.

கபே அமைப்பின் முன்னாள் இணைப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தற்போது ஆளுநராக இருப்பதனால் அவரின் செல்வாக்கு தற்போதும் இருக்க கூடும் எனக் கூறப்பட்டே தேர்தல் பணியில் ஈடுபட முடியாது என தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரியா தனித்து தடை செய்திருந்தார். இது அடிப்படையற்றது.

இதன் காரணமாக இது ஆணைக்குழுவின் முடிவா என தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களை தொடர்பு கொண்டோம் அப்போது இந்த முடிவினை அவர்கள் அறிந்திருக்கவே இல்லை . இதனால் ஏனைய உறுப்பினர்கள் ஊடாக குழுவின் முடிவினை ஆணைக்குழுவின் ஆய்விற்கு உட்படுத்திய நிலையில் விதிக்கப்பட்ட தடை உடனடியாகவே நீக்கப்பட்டதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே தவிசாளரது தன்னிச்சையான செயற்பாடுகள் கடும் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

No comments