காட்போர்ட் வாக்குப் பெட்டிகளினால் 40 மில்லியன் சேமிப்பு

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் பயன்படுத்துவதற்காக, காட்போட்டிலான வாக்குப் பெட்டிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

குறித்த காட்போட் பெட்டிகள், நீரில் கசிந்துவிடாத வகையில் மிகவும் பாதுகாப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு காட்போட் பெட்டிக்கு, ஆயிரத்து 500 ரூபாய் வரையில் செலவிடப்பட்டுள்ளதாகவும் பிளாஸ்டிக்கிலான பெட்டியொன்றுக்கு 8 ஆயிரத்து 500 ரூபாய் வரையில் செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன்முலம் 40 மில்லியன் ரூபா மக்கள் பணம் சேமிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments