இந்தியாவில் மீண்டும் சோகம் - ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த சிறுமி பலி


இந்தியாவின் - ஹரியாணா மாநிலத்தில் 50 அடி ஆழமான ஆழ்துளைக்  கிணற்றில்   விழுந்த 5 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

ஷிவானி என்ற ஐந்து வயது சிறுமி, கிணற்றில் விழுந்து 10 மணித்தியாலங்களின் பின்னர், பின் உயிருடன் மீட்கப்பட்டாலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஹரியாணா  மாநிலமத்தில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் வசித்து வந்த, ஷிவானி  நேற்று மாலை வீட்டின் அருகே  விளையாடிக் கொண்டிருந்த நிலையில், மூடப்படாமல் இருந்த, ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துள்ளார்.

உடனடியாக செயற்பட்ட, மாவட்ட நிர்வாகம், தீயணைப்புப் படை, பொலிஸார், ஆகியோர் சிறுமியை 10 மணித்தியாலங்களுக்குள் மீட்டனர். சிறுமி முதலில் 20 அடி ஆழத்தில் சிக்கியிருந்ததாகவும், எனினும் மீட்புப் பணியின்போது,  சிறுமி சறுக்கி 50 அடி ஆழத்துக்குச் சென்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

10 மணிநேர போராட்டத்தின் பின், 50 அடி ஆழத்தில் இருந்த சிறுமியை மீட்புப் படையினர்  மீட்டனர். மிகவும் பலவீனமான நிலையிலிருந்த சிறுமியை உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.

இதேவேளை, கடந்தவாரம் திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 2 வயதுக் குழந்தை சுஜித் 4 நாட்கள் போராட்டத்துக்குப் பின் சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments