மாணவர்கள் பலர் கைது

பதுளை - ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் மோதலில் ஈடுபட்ட 10 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழகத்தில் 2ம் ஆண்டில் கல்விகற்கும் 4 மாணவர்களைத் தாக்கியமை தொடர்பில் மூன்றாம் ஆண்டில் கல்விகற்கும் 10 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலன்னறுவை, பதவிய, ஹொரணை, கடவத்தை, இரத்தினபுரி, பாதுக்க ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களே இந்தச் சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments