நிலத்தில் சுட்டபோது இருவர் காயமடைந்தார்; எஸ்பியின் புதிரான விளக்கம்

மதுபோதையில் இருந்த இளைஞர்கள் தமது பாதுகாப்பு அதிகாரிகளின் துப்பாக்கியை பறித்து செல்ல முற்பட்டபோதே துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாக எஸ்.பி.திசாநாயக்க விளக்கமளித்துள்ளார்.
கினிகத்தேனை- பொல்பிட்டிய பகுதியில் நேற்று இரவு 7.30 மணியளவில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றிருந்தது.
நாடளாவிய ரீதியில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து இன்று (வியாழக்கிழமை) விளக்கமளித்துள்ள எஸ்.பி.திசாநாயக்க,
“எனது பாதுகாப்பு அதிகாரிகளின் துப்பாக்கியை மதுபோதையில் இருந்த இளைஞர் குழுவொன்று பறித்து செல்ல முயன்றது. இதன்போது நிலத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
இதில் இருவர் காயமடைந்த தகவல் கிடைத்ததும் பொலிஸாரிடம் சரணடைந்து வாக்குமூலமளிக்கும்படி எனது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பணித்தேன்.
இந்த சம்பவம் நடந்திருக்கக்கூடாது என்பதே எனது நிலைப்பாடும். சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி தொலைபேசியில் தொடர்புகொண்டு, பொலிஸ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்” என தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச்சூட்டை நடத்திய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments