கோத்தா தரப்பினாலேயே தாக்குதல்!




காலி ஹபராதுவையைச் சேர்ந்த எழுத்தாளரான லசந்த விஜயரத்ன தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

நேற்று 14ஆம் திகதி அதிகாலை காலி ஹபராதுவையில் அமைந்துள்ள லசந்த விஜயரத்ன அவர்களின் வீட்டினுள் ஆயுதங்களுடன் நுழைந்த குழுவொன்று இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரியவருகின்றது. தாக்குதலுக்குள்ளான லசந்த விஜயரத்ன அவர்கள் கராபிடிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு, அவர் 2015ஆம் ஆண்டு எழுதிய 'வீண்விரய அபிவிருத்தி மற்றும் ஊழல்' என்ற புத்தகம் தொடர்பாக கேள்வியெழுப்பியே தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். 

தேர்தல் தினத்திற்கு 48 மணிநேரம் இருக்கும் போது இந்த நாட்டில் ஜனநாயகத்துக்கு சவால் விடுக்கப்பட்ட இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக பரிசோதனை நடத்தப்பட்டு தாக்குதல் தொடர்பான தகவல்களை வெளியிடும்படியும், குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் சுதந்திர ஊடக இயக்கம் பொறுப்புவாய்ந்தவர்களிடம் வேண்டிக்கொள்வதாக தெரிவித்துள்ளது.

இதனிடையே கோத்தாவின் உத்தரவிலேயே தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

No comments