தேர்தல் குறித்து போலியான புலனாய்வு அறிக்கை

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அரச புலனாய்வு சேவை விசேட அறிக்கை ஒன்றை ஜனாதிபதியிடம் வழங்கியதாக சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் 2019.11.05 திகதி அன்று அரச புலனாய்வு சேவையினால் "ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட விசேட அரச புலனாய்வு அறிக்கை' என்ற தலைப்பில் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள ஆவணத்தில் உள்ள விடயங்கள் முற்றாக உண்மைக்கு புறம்பானது என தெரிவித்துக் கொள்கின்றோம்.

அரச புலனாய்வு சேவையில் உள்ளடங்கிய ஸ்ரீலங்கா பொலிஸ் எப்பொழுதும் நிறுவனமாக சுயாதீன நிறுவனம்" என்ற ரீதியில் இந்த உண்மைக்கு புறம்பான ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வகையில் அசியல் நடவடிக்கையில் ஈடுபடுதலோ அல்லது தலையிடுதல் அல்லது ஜனாதிபதி தேர்தலுக்கு அமைவாக எந்தவித கணிப்பீட்டையும் மேற்கொள்வது இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலும் இலங்கை பொலிஸ் முழுமையான கவனத்தை செலுத்துவது இந்த ஜனாதிபதி தேர்தல் சுதந்திரமாகவும் அமைதியான முiயிலும் நடைபெறுவதற்கு பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்துவதே ஆகும். இது பொலிஸின் முக்கிய பணியாகவும் அமைந்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறான உண்மைக்கு புறம்பான கடிதம் ஒன்றை சமூக வலைப்பின்னலில் வெளியிட்ட நபருக்கு எதிராக விசாரணை நடத்துவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் இது சமர்ப்பிக்கப்படவிருப்பதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments