சஜித்திற்கு மேலுமிருவர் ஆதரவு!

ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளர்களாக களமிறங்கியுள்ள இருவர் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு தனது ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
முன்னாள் வட மேல் மாகாண சபை உறுப்பினரான ஐ.எம்.ஆர். இல்யாஸ் மற்றும் முன்னாள் அமைச்சரான மில்ரொய் பெர்னாண்டோ ஆகியோரே இவ்வாறு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.
ஆனமடுவயில் இடம்பெற்ற சஜித் பிரேமதாசவின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட சுயாதீன வேட்பாளர் எம்.ஐ.ஆர். இல்யாஸ் தனது ஆதரவை வேட்பாளர் சஜித்துக்கு வெளிப்படுத்தியுள்ளார்.
அத்துடன், விசேட அறிவித்தலொன்றின் ஊடாக முன்னாள் அமைச்சர் மில்ரொய் பெர்னாண்டோ தனது ஆதரவாளர்களிடம் அன்னத்துக்கு வாக்களிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments