வவுனியா மின்சார சபை ஊழியர்கள் போராட்டம்

மின்சார சபை ஊழியர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தி, வவுனியாவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா பூங்கா வீதியிலுள்ள மின்சார சபை அலுவலகத்திற்கு முன்பாக மின்சார சபை ஊழியர்களால் இன்று (வியாழக்கிழமை) பகல் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டகாரர்கள், ‘முக்கிய குற்றவாளியை கைதுசெய், ‘எம்மை தாக்கியவரை பொலிஸார் கைதுசெய்ய தயங்குவது ஏன்?’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பினர்.
வவுனியாவில் கடந்த திங்கட்கிழமை மாலை ஆச்சிபுரம் பகுதிக்கு தொழில் நிமித்தம் சென்ற மின்சார சபை ஊழியர்கள் மீது அங்கிருந்த குழுவினரால் தாக்குதல் நடத்தப்பட்டது.
அத்தாக்குதலில் ஆறு மின்சார சபை ஊழியர்கள் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் சிலரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments