எக்னெலிகொட கடத்தல்; இராணுவத்தினருக்கு எதிராக குற்றப்பத்திரிகை

கடந்த 2009 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் இராணுவ புலனாய்வு பிரிவு பணிப்பாளர் ஷம்மி குமாரரத்ன உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இன்று (வியாழக்கிழமை) ஹோமாகம மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரினால் தண்டனைச் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக இந்த வழக்கை விசாரிக்க ஒரு சிறப்பு விசாரணை அமர்வினை நியமிக்குமாறு சட்டமா அதிபர் தலைமை நீதிபதியிடம் கோரியிருந்தார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கு பிரசார நடவடிக்கையில் ஈடுபட்ட வேளையிலேயே பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டதாக சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா தெரிவித்தார்.
மேலும் இந்த வழக்கின் சந்தேக நபர்கள் இராணுவத்தில் பல்வேறு அணிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் திட்டமிட்டு ஊடகவியலாளரை கடத்தி காணாமல் போகச்செய்தனர் என்றும் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

No comments